இம்மையமானது திருமந்திரத் தமிழ்மாமணி திரு.மு.பெ.சத்தியவேல் முருகன் அவர்களை நிறுவனர், இயக்குனர், ஆசிரியராகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழில் வழிபாடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிக்கிறது.
திருமணம், நிச்சயதார்த்தம், திருவடிப்பேறு முதலிய வாழ்வியல் சடங்குகள் மற்றும் குடமுழுக்கு, மண்டலாபிடேகம் முதலியவற்றைத் தூய செந்தமிழ் மாமறைகளினல் ஆற்றுவதற்குப் பயிற்சியளிக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப் பெறுகிறது.
அ. குறுகியகால தமிழ் வழிபாட்டுப் பயிற்சித் திட்டங்கள்
பயிற்சித் திட்டம் 1: சைவ அனுட்டானமும், தீக்கையும் 2 நாட்கள்
பயிற்சித் திட்டம் 2: திருமணம் முதலான வாழ்வியல் சடங்குகள் 5 நாட்கள்
பயிற்சித் திட்டம் 3: திருக்குடமுழுக்கு மற்றும் மண்டலாபிடேகம் 7 நாட்கள்
ஆ. நீண்டகாலப் பயிற்சித் திட்டம்
இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தமிழறிவு, சைவ சித்தாந்த அறிவு, ஆகம அறிவு, செய்முறை அறிவு ஆகிய அனைத்திற்கும் அடிப்படைப் பாடத்திட்டங்கள் உண்டு. இந்த அடிப்படைகளுடன் முறையாகக் கற்றுத்தேர விரும்புவோருக்கு அவரவர் தகுதிப்படி ஆறு மாதம் அல்லது ஓராண்டுப் பயிற்சியும், பயிற்சி முடிவில் சான்றிதழும் வழங்கப்படும். கட்டண விவரம் அணுகுவோருக்கு அறிவிக்கப்படும்.
மைய நிறுவனர் (ம) இயக்குநர் செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனர், B.E.,M.A.,M.Phil.