பேரன்புடையீர்!
இலண்டன் உலக சைவத் தமிழ்ப் பேரவையும் சொர்ணபூமி எனப்படும் சுவிட்சர்லாந்து நாட்டின் சைவநெறிக்கூடமும் இணைந்து பேர்ண் நகரில் நடத்திய உலக சைவ மாநாட்டில் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய பிரிட்டன் நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் தமிழ்க்கோயில்கள் அறங்காவலர்கள் அனைவரும் 16-9-2012 – ஆம் நாள் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் கூடி, உலகெங்கணும் உள்ள சைவத் தமிழ்த் திருக்கோயில்களில் இனி கருவறையில் தமிழ் வழிபாடே ஒலிக்க வேண்டும் என்று உறுதி பூண்டு உலகப் பிரகடனம் செய்துள்ளார்கள். தமிழ் வழிபாட்டிற்குக் கிடைத்துள்ள இந்த வரலாற்று வெற்றியை இங்கே தமிழகத்திலும் கொண்டாட தெய்வத்தமிழ் அறக்கட்டளையும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும் இணைந்து தமிழ் வழிபாட்டு வெற்றி விழா இங்கே எடுக்கிறது. இவ்விழாவில் மிக முக்கியமான தமிழ் வழிபாட்டுத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவின் நிகழ்ச்சி நிரல்
இவ்விழாவில் திரளாக தமிழ் அறிஞர்களும், அருட்சுனைஞர் பட்டயப் படிப்பு பயிற்சி பெற்ற மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இடம் : எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக கலைக்கூடம். எண் 1, ஜவகர்லால் நேரு சாலை, (100 அடி சாலை), வடபழனி சந்திப்பு அருகில், சென்னை – 600 026.
நாள் : 14-10-2012; ஞாயிறு காலை 9.30 மணி அளவில்.
தமிழ் வழிபாட்டு வெற்றி விழா – அழைப்பிதழ் பதிவிறக்கம் செய்ய
Posted in: வழிபாடு
Comments are closed.