திருமுருகாற்றுப்படை

May 6, 2015 |

திருமுருகாற்றுப்படை

muruga

 

 

திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப்படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நநூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார்.

5 கதாபாத்திரங்களைக் கொண்டு ( நக்கீரர், அவர் சீடர், அருணகிரியார், நம்பியாண்டார் நம்பி, வாசகர் ஆகிய நாம்) ஒரு நாடகத்தை உருவாக்கி ஆறுபடை வீட்டிற்கும் அழைத்துச் சென்று நமக்கு வழிகாட்டியாய் விளங்கி அரிய நுட்பங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே வந்திருக்கிற உரை நூல்களில் சில அங்கும் இங்கும் உதவுவனவாகவும், சில போதியதாக இல்லாதவையாகவும் இருப்பதைக் கண்டு புதியதொரு உரை நூலாக யாக்கப்பட்டுள்ளது.

Posted in: படைப்புகள்

Comments are closed.