வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு

May 7, 2015 |

வியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு

 • எச்சரிக்கை: மீனம், ரிடபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுர், கும்பம்.

 • நன்மை: மேடம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்.

 •  19-12-2009 காரிக்கிழமை(சனிக்கிழமை) அன்று வியாழன் கோள் மகரத்திலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சி

 • சோதிட ரீதியாக இதனால், சில இராசிக்காரர்களுக்கு ஆக்கமும், சில இராசிக்காரர்களுக்குத் தாக்கமும் ஏற்படுவது இயல்பு. மழை பெய்தால் விவசாயிகளுக்கு நன்மை; சூளை வியாபாரிகளுக்குப் பாதிப்பு. ஆடிக்காற்றால் வெப்பம் குறையும்; ஆனால் உப்பு வியாபாரிகளுக்கு அது ஆகாது. அது போல குரு அவருடைய வழியில்இ ஓர் இராசியிலிருந்து இன்னொரு இராசிக்குப் போய் அமர்கிறார். அது சிலருக்குப் புத்துணர்வையும் சிலருக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துவது இயற்கை நிகழ்வு. வரும் திசம்பரில் நிகழ்வுள்ள குரு பெயர்ச்சியால் எந்தெந்த இராசிக்காரர்களுக்கு என்னென்ன நேர்வுகள் என்பதை இங்கே காண்போம்.

 •  நல்லவேளை! பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு அதிலிருந்து மீண்டு தெம்பும், துணிவும், தெளிவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், கோள்கள் எல்லாம் அண்ட கோடிகளை எல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் ஆற்றி ஆன்ம கோடிகளைக் காத்துவரும் பரம்பொருளின் ஏவலால் இறைபணியை ஆற்றுவன.

 •  அப்பரம்பொருளிடம் உருகிய உள்ளத்தால் விண்ணப்பம் வைப்போம்! அவன் கருணையினால் கட்டளை இட அவன் பணி ஆற்றும் கோளாகிய குரு, பாதிப்புகளை இல்லை எனும்படியோ அல்லது தெரியாதபடியோ நிச்சயம் செய்து விடுவார்.

 •  அப்பரம்பொருளோ, தமிழ் மொழிக்குச் சங்கம் வைத்தது, தமிழால் வைதாரையும் வாழ வைப்பது. எனவே பாதிப்பு இராசிக்காரர்களுக்காக, பரம்பொருளுக்கு விருப்பமான பைந்தமிழில் வேள்வி செய்ய தமிழ்வழிபாட்டுப் பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.

 •  எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள் இறைவனிடம் தமிழ் வேள்வி வழிபாடு செய்யின் நன்மையே நடைபெறுவது திண்ணம்.

  “ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
  அடியார் அவர்க்கு மிகவே”

நேரம் : 19-12-2009 அன்று காலை 7.15 மணி முதல் நல்ஓரையில்
நிகழ்த்துபவர் : சிவ.மு.பெ.சத்தியவேல் முருகனார்,B.E.,M.A.,M.Phil
கட்டணம் : ஒருவருக்கு ரூ.150/-
இடம் : பத்மாவதி திருமண மண்டபம், சைதாபேட்டை

 

குறிப்பு: மணியார்டர் படிவத்தில் தகவலுக்கான இடத்தில் பெயர், நட்சத்திரம், கோத்திரம், முகவரி ஆகிய விவரங்களை தரவும்.
நேரில் வர இயலாதவர்களுக்கு அருட்பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு-மணியார்டர் அனுப்ப,

Dheiva Murasu
9/1 Manjolai First Street, Kalaimagal nagar
Ekkaduthangal, Chennai (Madras) 600 032
Tamilnadu, India.
Phone : 91-44-2225 0643, 91-44-2225 0964.
email : shri@pppindia.com

Posted in: Uncategorized

Comments are closed.