படைப்புகள்

முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதிய நூல்கள்

M P Sathiyavel Murugan

Dr M.P.Sathiyavelmuruganar Books – Click here to View List of Books

செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல்

செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல்   2000-த்தாண்டின் அற்புதம் இத்தலைமுறை காணும் – செந்தமிழாகமக் குடநீராட்டு நன்னூல். தமிழர்களின் அநுபவத் தெளிவாலும் ஆன்மீகப் பயிற்சியாலும் அருளானுபவச் செழிப்பினாலும் உண்டாக்கப் பெற்ற பண்பாட்டு உறைவிடமே தமிழகத் திருக்கோயில்கள். திருக்கோயில் அமைப்பு முறை, திருவுருவத் திருமேனிகளைப் பிரதிட்டை செய்யும் முறை, பூசை முறை, செயல்முறை விதிகள், விளக்கங்கள் ஆகியவை பிற மொழியில் இருந்த காரணத்தால் தமிழகத் திருக்கோயிற் செயல்முறை விளக்கங்கள் தமிழக மக்களின் வாழ்வியலை விட்டு நெடுந்தூரம் விலகியே போய்விட்டன. அத்தகைய [மேலும் அறிய…]

குற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு

குற்றக்கழுவாய் (பிரதோஷ) வழிபாடு   இறைவனை மறவாது வழிபட வேண்டும் என்பது பொது நியதி. எந்த வழிபாடானாலும் அது அறிவோடு ஆற்றப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு முதல் எதிரி ஆண்டவன் தான். இதையே இந்நூலில் ஆசிரியர் “அறிவோடு அர்ச்சித்தல்” என்பது “அறிவு” என்பதை உடம்பொடு புணர்த்தல் என்ற இலக்கணப் படி மிக அழகாக எமுதியுள்ளார். இவ்வளவு சிறப்புமிக்க பிரதோஷ வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும் ? அப்படிச் செய்வதன் பொருள் என்ன? [மேலும் அறிய…]

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்

வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்   நமது நாட்டில் குழந்தையைத் “தொட்டில் இடுதல்” ஆகிய தொடக்கம் முதல் “திருவடிப்பேறு” ஆகிய அடக்கம் வரை எத்தனையோ சடங்குகள் உள்ளன. சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை ஓர் ஓழுங்குமுறைக்குள் கொண்டு வர தமிழ்ச் சான்றோர்களால் யாக்கப்பட்ட முறையாகும். அவை மதிப்பு பெறுவது அவரவர் தாய் மொழியில் அவை ஆற்றப்படும்போது என்பது தெளிவு. ஆகவே தமிழர்கள் தமிழ் மொழிலேயே வாழ்வியல் சடங்குகளை ஆற்றுவதே இன்றைய தேவை. அந்தத் தேவையை நிறைவு செய்ய [மேலும் அறிய…]

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை     திருமுருகாற்றுப்படை ஒரு தீவிர பத்தனை முருகப்பெருமானிடம் ஆற்றுப்படுத்துவது. திருமுருகாற்றுப்படைக்குச் சான்றோர் சிலர் உரை கண்டிருக்கின்றனர். ஆனால் இந்நநூலாசிரியர் தமிழ்ச்சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார் நன்னூலுக்குச் சிவஞான முனிவர் விருத்தியுரை கண்டது போல் ஒரு விருத்தியுரை கண்டிருக்கிறார். 5 கதாபாத்திரங்களைக் கொண்டு ( நக்கீரர், அவர் சீடர், அருணகிரியார், நம்பியாண்டார் நம்பி, வாசகர் ஆகிய நாம்) ஒரு நாடகத்தை உருவாக்கி ஆறுபடை வீட்டிற்கும் அழைத்துச் சென்று நமக்கு வழிகாட்டியாய் விளங்கி அரிய நுட்பங்களை வெளிப்படுத்தி [மேலும் அறிய…]

சித்தாந்தச் சிந்தனைத்தேன் (குறுந்தகடு)

சித்தாந்தச் சிந்தனைத்தேன் (குறுந்தகடு)   The Saiva Siddhantha philosophy is the choicest product of Dravidian intellect. – G.U.Pope. The unique position of Saiva Siddhantha in the history of thought is the fact that it expounds by careful reflection the systematic account of the process of cosmic evolution which attempts to comprehend the universe as a sum [மேலும் அறிய…]