தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை வழக்கில் உள்ள அரபு எண்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தல்.
வழிகாட்டு முகமாக தமிழ் எண்களின் வரிவடிவத்திற்குப பின் அரபு எண்களை மென்பின் புலங்காட்டல்.
சாலிவாகன சகாப்தத்திற்கு வழியனுப்பி விடை தந்து திருவள்ளுவர் ஆண்டினை ஏந்தி
எடுத்தல்.
60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களையும் வடமொழியில் கூறிவரும் கொடுமையைக் களைந்து
பொருள் பொதிந்த புத்தம் புது தமிழ் இணைப் பெயர்களை அறிமுகப்படுத்தல்.
மதியால் பெயர் பெறற மாதங்களின் பெயரைத தூய தமிழால் வழங்குதல்.
அமாவாசை – பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு ஏன்?
மறைமதி-நிறைமதி, பதிற்றொருமை, வளர்பிறை-தேய்பிறை என அவற்றின் தூய தமிழ் வடிவங்களை
உலா வரச் செய்தல்.
பண்டிகைகள், விழாக்களைத் தமிழ்ப் பெயர்களால் வழக்கில் உலவவிடல்.
முகூர்த்தம்-முழுத்தம் என தூய தமிழால் வழங்கப் பெறல்.
நாயன்மார்கள், மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள்
தமிழில்.
மொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!
திருமந்திர மாநாட்டில் 2-1-09 அன்று திருவாவடுதுறை ஆதீனம் தவத்திரு முத்துகுமாரசாமி
தம்பிரான் சுவாமிகள் தெய்வமுரசு நாட்காட்டி வெளியீட்டிற்கு நல்வாழ்த்து வழங்கினார.
Click Here To Find Out What THE HINDU says about this calendar
தெய்வமுரசு தனித்தமிழ் நாட்காட்டியின்
விலை: ரூ.50. தபால் செலவு தனி
Dheiva Murasu
9/1 Manjolai First Street, Kalaimagal nagar
Ekkaduthangal, Chennai (Madras) 600 032
Tamilnadu, India.
Phone : 91-44-2225 0643, 91-44-2225 0964.
email : shri@pppindia.com
Posted in: Uncategorized
Comments are closed.